காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன?

ஆபரணத்தங்கத்தின் விலை காலையில் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.880 குறைந்தது.
காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன?
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.240 கூடி ரூ.1,12,480க்கும் விற்பனையான நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்தது ரூ.1,11,600க்கு விற்பனை ஆகிறது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 13, 14-ந்தேதிகளில் விலை குறைந்து, 15-ந்தேதி விலை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக விலை குறையத் தொடங்கியுள்ளது.

நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்தநிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத்தங்கத்தின் விலை காலையில் ரூ.240 உயர்ந்தநிலையில் மாலையில் ரூ.880 குறைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com