சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... நகைபிரியர்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது.
சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை... நகைபிரியர்கள் மகிழ்ச்சி
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.430குறைந்து ரூ.57,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com