காலையில் குறைந்து மாலையில் எகிறிய தங்கம் விலை..நிலவரம் என்ன?

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது.
காலையில் குறைந்து மாலையில் எகிறிய தங்கம் விலை..நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த 29-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400க்கு விற்பனையாகி வரலாற்ற் சாதனையை பதிவு செய்தது.

மறுநாள் முதல் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. 30-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 800 ஆகவும், 31-ம் தேதி ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும், 2-ம் தேதி ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 600 ஆகவும் குறைந்தது.

அதன்பிறகு தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 3-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ஆகவும் 4-ம் தேதி ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும் அதிகரித்து விற்றது.

நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560க்கு விற்கப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 960க்கு விற்கப்படுகிறது. இன்று காலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 குறைந்தது. கடந்த 2 நாட்களில் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது.

இந்தநிலையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து சவரன் ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1.600 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.20 குறைந்த நிலையில் மாலையில் மாற்றமின்றி ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை பிற்பகலில் மாற்றமின்றி ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com