

சென்னை,
தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று முன் தினம் காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் மாலையில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், பவுனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.