

சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தை சந்தித்தது. கடந்த வியாழக்கிழமை மட்டும் சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 குறைந்த தங்கம் விலை, அதன் பிறகு மேலும் உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வார தொடக்கமான இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துஒரு சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.