நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..மாலையில் மேலும் குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி
தங்கம் விலை
Published on: 

சென்னை,

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ.800 குறைந்துள்ளது.

தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சற்று குறைந்த வண்ணம் உள்ளது. இந்த 10 நாட்களில் ஒருசில நாட்களில் சற்று உயர்வை சந்தித்தாலும், சரிவு என்பது இருந்து கொண்டே வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.28) மாலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,665-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் மேலும் ரூ.800 குறைந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் சரிவு, நகை பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றம் ஏற்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com