தங்கம் விலை மீண்டும் ஏற்றம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது.
தங்கம்
Published on: 

சென்னை,

தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏற்ற, இறக்கம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 25-ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தங்கம் விலை

இதற்கிடையில், நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.1,09,120-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com