தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

Also Read
கனடாவில் பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சியடைந்தேன் - பிரதமர் மோடி
கோப்புப்படம்

கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்தது. அதன் பின்னர், சற்று குறைந்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உச்சம் தொட்டது. இடையிடையே தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது.

Also Read
தென் தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு
கோப்புப்படம்

தங்கம் விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.

Also Read
கூடலூர் வனப்பகுதியில் தொடரும் தங்க வேட்டை: கேரள ஆசாமிகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோப்புப்படம்

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.190 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,790-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com