

சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும், ஒரு கிராம் ரூ. 14,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை
இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் (14.04.2026 - செவ்வாய்கிழமை) உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
14.04.2026 ஒரு சவரன் ரூ. 1,13,760
13.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,480
11.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,000