மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ளது
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 14,220-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (15.04.2026 - புதன்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

15.04.2026 ஒரு சவரன் ரூ. 1,14,560

14.04.2026 ஒரு சவரன் ரூ. 1,13,760

13.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,480

11.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800

10.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,000

09.04.2026 ஒரு சவரன் ரூ. 1,12,00

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com