தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

கடந்த ஆண்டில் தொடக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை அக்டோபர் மாதத்தில், ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தது. நேற்று 2025 ஆண்டின் தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com