தங்கம் விலை தொடர்ந்து உயர்வு...இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத்தொடங்கியிருப்பது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு...இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் (மே) 27-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை தொடர்ந்து சரிந்தது. கடந்த 30-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 895-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 360-க்கும் விற்பனையானது.

அதன்தொடர்ச்சியாக, 3 நாட்கள் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.30-ம் ஒரு சவரன் ரூ.240- உயர்ந்து முறையே கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், திடீரென நேற்று மாலையிலும் தங்கம் விலை 2-வது முறையாக மீண்டும் ஏற்றம் கண்டது. நேற்று காலை நேர நிலவரத்தை காட்டிலும் கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்தது. அந்த வகையில், ஒரே நாளில், ஒரு கிராம் தங்கம் ரூ.140-ம் ஒரு பவுன் ரூ.1,120-ம் உயர்ந்து, கிராம் ரூ.9 ஆயிரத்து 60-க்கும், பவுன் ரூ.72 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.72,640-ஆகவும், ஒரு கிராம் ரூ.9,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.கடந்த 20 நாட்களுக்கு பிறகு, அதாவது மே மாதம் 11-ந்தேதிக்கு பிறகு, தங்கம் விலை பவுன் மீண்டும் ரூ.72 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com