காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.880 குறைந்த நிலையில், மாலையில் உயர்ந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தையும், 29-ந்தேதி ரூ.86 ஆயிரத்தையும், கடந்த 1-ந்தேதி (நேற்று முன்தினம்) ரூ.87 ஆயிரத்தையும் தாண்டியது.

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்திருந்தது. விலை குறைந்து இருக்கிறதே என நினைத்த மாத்திரத்தில் மாலையில் மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880-ம், கிராமுக்கு ரூ.110-ம் அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.86,720-க்கும், ஒரு கிராம் ரூ.10,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை மாலையில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com