தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பின்னர் சற்று விலை குறைந்திருந்தாலும், அதனைத் தொடர்ந்து விலை எகிறிக் கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் கடந்த மாதம் இறுதி வாரத்தில் இருந்து விலை ராக்கெட் வேகத்தில் உயருகிறது.

கடந்த மாதம் 25-ந் தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை கடந்து இருந்தது. அதனையடுத்து 27-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தையும், 29-ந் தேதி ரூ.76 ஆயிரத்தையும், கடந்த 1-ந் தேதி ரூ.77 ஆயிரத்தையும் தாண்டி தினமும் புதிய உச்சத்திலேயே பயணம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,805-க்கும், ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து நேற்று வரை 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.500-ம், சவரனுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.78,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com