தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,240 உயர்ந்துள்ளது .
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com