தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த ஜனவரி 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 64,400-க்கும், கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.106 ஆகவும், ஒரு சவரன் ரூ. 1,06,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com