தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.72,360-க்கு விற்பனையானது.

நேற்று எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனையான நிலையில், இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிரடியாக குறைந்து ரூ.71,040-க்கும், கிராமுக்கு ரூ.165 குறைந்து 8,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று மாலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.8,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com