

சென்னை,
தங்கம் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 1,18,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 14,870க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமிற்கு ரூ. 120 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ. 960 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 285க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,85,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.