அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடனேயே போக்கு காட்டி வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் ஒரு நாள் தங்கத்தின் பக்கமும், மறுநாளில் பங்கு சந்தைகள் பக்கமும் மாறி மாறி செல்வதால் இந்த நிலை நீடிக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது.

அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. அதிலும் இந்த மாதம் கடந்த 13-ந்தேதி விலை அதிகரித்து வந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்து, பிறகு விலை குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் குறைந்து, ஒரு கிராம் ரூ.171-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com