மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன்பின்னரும் விலை ஏறி வந்த நிலையில், 27-ந்தேதி விலை குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை குறைந்தே காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.60,760 என்ற புதிய உச்சத்தில் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com