

சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 10-ந்தேதி கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மேலும் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் குறைந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தங்கம் விலை நேற்று அப்படி இல்லை என முற்றுப்புள்ளி வைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம் எந்த அளவுக்கு குறைந்ததோ, அதே அளவுக்கு நேற்று தங்கம் விலை ஏற்றம் கண்டது. நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனையானது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.