தங்கம் விலை மேலும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,890-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.

Also Read
கள்ளக்காதலால் விபரீதம்: தொழிலதிபர் மனைவியிடம் 1 கிலோ தங்கம் - வைர நகைகள் அபகரிப்பு
கோப்புப்படம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,930-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read
குடும்ப தகராறில் பயங்கரம்: மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகள்
கோப்புப்படம்

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்

25.02.2026 - ரூ.1,19,440

24.02.2026 - ரூ.1,19,120

23.02.2026 - ரூ.118,880

22.02.2026 - ரூ.117,440

21.02.2026 - ரூ.117,440

Also Read
உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அடித்துக் கொன்ற வாலிபர்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com