இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி
Published on: 

சென்னை,

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ. 1,09,400-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது.

இந்தநிலையில், தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 8) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே மாற்றமின்றி விற்பனையாகிறது.

தங்கம் விலை

ஒரு சவரன் ரூ. 1,09,680 -க்கும் ஒரு கிராம் ரூ. 13,710 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 .45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மாற்றமின்றி விற்பனையாவது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com