சென்னையில் ஆபரணத்தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை 5 நாட்களில் சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.73,040-ஆகவும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.73,040-க்கும், ஒரு கிராம் ரூ.9,130-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி  ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com