மங்களூருவில் புதிய பிரமாண்ட கச்சா எண்ணெய் சேமிப்பு நிலையம்

தற்போது ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் தடையின்றி செல்ல தொடங்கி உள்ளன. கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. போன்றவை இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றன
 சேமிப்பு நிலையம்
Published on

இந்தியா கச்சா எண்ணெய் தேவையை பெரும்பாலும் வெளி நாடுகளை நம்பியேதான் இருக்கின்றன. சுமார் 85 சதவீதத்துக் கும் மேல் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப் பட்டு அந்த கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல், டீசல் போன்றவை பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தநிலையில் சமீபத் தில் அமெரிக்கா, ஈரான் மீது நடத்திய தாக்குதல் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது.அந்த நீரிணை மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கப்பல்கள் மூலம் வரவேண்டிய கச்சா எண்ணெய் தடைபட்டது. இதனால் இந்தியா வேறு வழியில் கச்சா எண்ணெய்யை இந்தியா பக்கம் கொண்டு வர முயற் சித்தது.

ஹார்முஸ் நீரிணை

தற்போது ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் தடையின்றி செல்ல தொடங்கி உள்ளன. கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. போன்றவை இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.சர்வதேச போர், கடல்வழி பாதைகளில் சிக்கல் இதுபோன்ற நிலை மீண்டும் வந்தால், அதை சமாளிக்க ஏதுவாக மத்திய அரசு இப்போது நடவடிக்கைகளை கையில் எடுக்க தொடங்கி உள்ளது.அதன்படி, மங்களூருவில் பூமிக்கு அடியில் பாறை குகை போன்ற அமைப்பில் பிரமாண்ட கச்சா எண்ணெய் சேமிப்பு நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தக வல்கள் வெளியாகி உள்ளன.ரூ.15 ஆயிரம் கோடி செலவில் இந்த சேமிப்பு நிலையம் வடி வமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவ னத்துக்கு சொந்தமான நிலத்தில் இந்த நிலையம் உருவாக இருக்கிறது. அந்த பணியை ஓ.என்.ஜி.சி. நிறுவனமே மேற் கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

17.5 லட்சம் டன் சேமிக்க முடியும்

இந்த சேமிப்பு நிலையத்தில் 1.75 மில்லியன் டன் அதாவது 17 லட்சத்து 50 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் சேமிக்க முடி யும் என்கிறார்கள். இத்திட்டம் நிறைவடையும்போது, இந்தியாவின் தற்போதைய அவசரகால எண்ணெய் சேமிப்புத் திறன் 53.3 லட்சம் டன் என இருக்கும் சூழலில், தற்போது அதன் அளவு மேலும் அதிகரிக்கும்.இதுவரை இந்தியாவில் உள்ள வியூக எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் விசாகப்பட்டினம், மங்களூரு மற்றும் பாடூர் ஆகிய இடங்களில் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் இந் தியன் ஸ்டிராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் லிமிடெட் (ஐ.எஸ்.பி.ஆர்.எல்.) அமைப்பால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஆனால், முதன்முறையாக ஒரு பொதுத்துறை எண் ணெய் உற்பத்தி நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யிடம் தேசிய முக் கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புப் பணியை மத்திய அரசு நேரடியாக ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com