

சென்னை,
தங்கம் விலை கடந்த 19-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்த நிலையில், கடந்த 20-ந்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன் பின்பு கடந்த 25-ந் தேதி தங்கம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை:-
இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை:-
நேற்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.