பங்குச்சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு

இந்த ஆண்டின் மிக மோசமான அளவாக இன்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தைகள் கடும் சரிவு; முதலீட்டாளர்களுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு
Published on

மும்பை,

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் மூன்று வாரங்களாக நீடித்து வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. இதனால், சர்வதேச அளவில் எரிவாயு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,497- புள்ளிகள் சரிந்தன. நிப்டி 776 புள்ளிகள் சரிந்தன. இந்த ஆண்டின் மிக மோசமான அளவாக இன்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com