

மும்பை,
தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளான நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பங்குச்சந்தை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.05 மணி முதல் 3.30 மணி வரை சிறப்பு 'முகூர்த்த வர்த்தகம்' நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையுடன் புதிய இந்து புத்தாண்டான 'விக்ரம் சம்வத் 2083' தொடங்குகிறது. இதையொட்டி, மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) ஆகியவை விடுமுறை நாளான நாளையும் சிறப்பு வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:20 மணிக்கு தொடங்கும் இந்த சிறப்பு வர்த்தகம், மாலை 3:30 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும். அதன்படி, நாளை மதியம் 2.20 மணிக்கு தொடங்கும் இந்த சிறப்பு 'முகூர்த்த வர்த்தகம்', மதியம் 3.30 மணி வரை நடைபெறும். இந்த மங்களகரமான நேரத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டு முழுவதும் செல்வமும், செழிப்பும் பெருகும் என்பது முதலீட்டாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால், நாளை பங்குச்சந்தை வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான வர்த்தகத்திற்கு முன்னதாக, மதியம் 2.05 மணிக்கு சிறப்பு 'ப்ரீ-ஓப்பனிங்' (Pre-opening) அமர்வு தொடங்கும். இதன் விவரம் வருமாறு:-
• மதியம் 2.10 முதல் 2.15 வரை: இந்த 5 நிமிடங்களில் 'லிமிட் ஆர்டர்கள்' மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
• மதியம் 2.15 முதல் 2.17 வரை: பதிவு செய்யப்பட்ட ஆர்டர்களுக்கான 'ஆர்டர் மேட்சிங்' (Order Matching) பணிகள் நிறைவடையும்.
அதனை தொடர்ந்து மதியம் 2.20 மணிக்கு வழக்கமான வர்த்தகம் தொடங்கி, மாலை 3.30 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10, 2026 செவ்வாய்க்கிழமை அன்று பங்குச் சந்தைகளுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈக்விட்டி, டெரிவேட்டிவ்ஸ், கடன் சந்தை மற்றும் எலக்ட்ரானிக் கோல்ட் ரிசீப்ட்ஸ் உட்பட அனைத்து பிரிவுகளின் வர்த்தகமும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.