மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்கு சந்தைகள் வீழ்ச்சி

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் குறியீடு, 176.19 புள்ளிகள் உயர்ந்து 82,445.97 புள்ளிகள் என்ற அளவில் லாபத்துடன் வர்த்தகம் தொடங்கியது.
மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்கு சந்தைகள் வீழ்ச்சி
Published on

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் எதிரொலியாக இன்று மதியம் பங்கு சந்தைகள் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டன. இதில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு, 80 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. இதனால், 2,370.36 புள்ளிகள் அல்லது 2.88 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சியடைந்து 79,899.42 புள்ளிகளாக வர்த்தகம் நடந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு, 748.9 புள்ளிகள் அல்லது 2.95 சதவீதம் என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. எனினும், மெல்ல அதில் இருந்து மீட்சியடைந்து வருகிறது.

Also Read
தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் அரிய வகை காந்தங்களுக்கான வழித்தட ஒப்புதல்: இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு
மத்திய பட்ஜெட் எதிரொலி; பங்கு சந்தைகள் வீழ்ச்சி

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசும்போது, பாதுகாப்பு பரிவர்த்தனை வரியை 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதத்திற்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பங்கு சந்தைகள் இன்று சரிவை சந்திப்பதற்கான காரணிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

எனினும், மும்பை பங்கு சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் குறியீடு, 176.19 புள்ளிகள் உயர்ந்து 82,445.97 புள்ளிகள் என்ற அளவில் லாபத்துடன் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு, 13.10 புள்ளிகள் உயர்ந்து 25,333.75 புள்ளிகள் என்ற அளவில் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com