

மும்பை,
சரத்பவாருடன் அவரது மருமகன் சதானந்த சுலே மற்றும் பேத்தி ரேவதியும் வந்து தங்கள் ஓட்டை பதிவு செய்தனர். இதில், ஆச்சரியம் என்னவென்றால் சரத்பவார் ஓட்டுப்போட்ட வார்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 214-வது வார்டில் சிவசேனா சார்பில் அரவிந்த் பானே, நவநிர்மாண்சேனா சார்பில் தன்ராஜ் சகாதேவ், காங்கிரஸ் சார்பில் கவுசிக் ஜாசுபாய், பா.ஜனதா சார்பில் சரிதா அஜய் பாட்டீல் ஆகியோர் உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர்.