கார் கவிழ்ந்து விபத்து; பிளஸ்–2 மாணவர் பலி

காரைக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக இறந்துபோனார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
கார் கவிழ்ந்து விபத்து; பிளஸ்–2 மாணவர் பலி
Published on

காரைக்குடி,

சென்னை வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சுமதி(வயது 48). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு காரில் புறப்பட்டார். அவருடன் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பிளஸ்2 படித்து வந்த முருகன் மகன் அஸ்வின்(17), தங்கராஜ், நாகவள்ளி ஆகியோரும் உடன் சென்றனர். காரை ஆனந்தன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

காரைக்குடி அருகே அமராவதிபுதூரை அடுத்த சங்கரபதிகோட்டை பகுதியில் கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. அப்போது சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் கார் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த அஸ்வின், சுமதி உள்பட 5 பேரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே அஸ்வின் பரிதாபமாக இறந்துபோனார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com