2 பேர் மீது வழக்கு

மதுரையில் பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
2 பேர் மீது வழக்கு
Published on

மதுரை,

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 55). இவர் ஆரப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், பேரையூர் பரமசிவம் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினார். அதற்கான வட்டியை செலுத்தி வந்த நிலையில், அவர்கள் இருவரும் கூடுதல் வட்டி கேட்டு அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பத்மாவதி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி சட்டத்தின் கீழ் ரஞ்சித்குமார், பரமசிவம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com