சிரஞ்சீவி படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

சிரஞ்சீவி மற்றும் ரவிதேஜா இணைந்து நடிக்கும் படத்தை பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிரஞ்சீவி படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
Published on

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காட்ஃபாதர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சீரஞ்சீவியின் 154-வது படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக சிரஞ்சீவியின் 154 படத்திற்கு 'வால்டேர் வீரய்யா' என பெயரிடப்பட்டுள்ளதாக டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு உற்சாகப்படுத்தியுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com