சதுரகிரியில் சித்திரை பௌர்ணமி வழிபாடு: பக்தர்கள் குவிந்தனர்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு 21 சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சதுரகிரியில் சித்திரை பௌர்ணமி வழிபாடு: பக்தர்கள் குவிந்தனர்
Published on

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று சித்திரை மாத பௌர்ணமி தரிசனத்துக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். வனத்துறை கேட் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு 21 சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாப்டூர், வத்திராயிருப்பு போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com