சினிமாவில் 10 ஆண்டுகள்... நடிகை டாப்சி நெகிழ்ச்சி

சினிமாவில் 10 ஆண்டுகள்... நடிகை டாப்சி நெகிழ்ச்சி
Published on

நடிகை டாப்சி சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவர் ரஷ்மி பத்தூர் என்ற இந்தி படம் மூலம் அறிமுகமானார். தமிழில் டாப்சிக்கு ஆடுகளம் முதல் படம். வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறார். சினிமாவில் 10 ஆண்டுகள் நீடிப்பது குறித்து டாப்சி நெகிழ்ச்சியோடு அளித்துள்ள பேட்டியில், "நான் நடிகையாக 10 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனையோ இடைஞ்சல்களை எதிர்கொண்டாலும் கதை தேர்வில் முதலில் தடுமாறினாலும் அதன் பிறகு எடுத்த மிகச்சிறந்த முடிவுகளால் நல்ல பலனை அடைந்தேன். இப்போது நான் எதிர்பார்த்த இடத்தில் இருக்கிறேன்.

எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, இந்திக்கு வருவதற்கு முன்பே தென்னிந்தியாவில் சில படங்களில் நடித்தேன். அவற்றின் மூலம் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆனால் நடிகையாக எனக்கு திருப்தி கிடைக்கவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக இந்தி பக்கம் பார்வையை திருப்பினேன். பிங்க் படம் எனது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கிருந்து எனது பாணியில் நான் பயணிக்க ஆரம்பித்தேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com