14.2 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு… நடிகை ரன்யா ராவின் மனு தள்ளுபடி

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
14.2 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு…  நடிகை ரன்யா ராவின் மனு தள்ளுபடி
Published on

பெங்களூரு,

நடிகை ரன்யா ராவ் கடந்த ஆண்டு மார்ச் 3-ந்தேதி துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய பொருளாதார குற்றப்பிரி வினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் வருடன் ஷாகில் சர்க்காரியா என்பவரும் கைது செய்யப்பட்டார். கடத்தல் தடுப்பு, அன்னிய செலாவணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 19-ந் தேதி அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ், ஷாகில் சர்க் காரியா ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் அவர்கள் 2 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர் மேற்கொண்ட கைது நடவடிக்கை சரியானது என்று நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com