ஒரே படத்துக்கு ரூ.15 கோடி: நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.
ஒரே படத்துக்கு ரூ.15 கோடி: நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா
Published on

ரூ.15 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட திரைப்படங்கள் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது பான்-இந்திய நட்சத்திரமாக வலம் வரும் அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் இந்தி திரைப்படமான காக்டெயில் 2 (Cocktail 2)-இல் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்க, கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவை முந்திய ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, இந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடித்துவரும் புதிய படத்திற்காக ரூ.10 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சம்பள விஷயத்தில் நயன்தாராவை ராஷ்மிகா முந்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதனிடையே, ராஷ்மிகா தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஐந்து திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 'ரணபலி', 'மைசா' உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான மற்றும் அதிரடி கதாபாத்திரங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com