'2கே லவ் ஸ்டோரி' படம் 2கே கிட்ஸ்களுக்கு அறிவுரை கூறும்படி இருக்காது - இயக்குனர் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கியுள்ள '2கே லவ் ஸ்டோரி' திரைப்படம் வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'. இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர், தனது புதிய படமான '2கே லவ் ஸ்டோரி' குறித்து பேசியுள்ளார். அதாவது, "இப்படம் 2கே கிட்ஸ்களுக்கு அறிவுரை கூறும்படி இருக்காது, அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறும்படி இருக்கும். இவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறையை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும்" என்று கூறியுள்ளார்.