சினிமாவில் 45 ஆண்டுகள்; விஜயசாந்தி நெகிழ்ச்சி

விஜயசாந்தி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது.
சினிமாவில் 45 ஆண்டுகள்; விஜயசாந்தி நெகிழ்ச்சி
Published on

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த விஜயசாந்தி, அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தும் புகழ் பெற்றார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.

விஜயசாந்தி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து நெகிழ்ச்சியோடு அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் என்னை பாரதிராஜா 1979-ல் வந்த கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு தெலுங்கிலும் கிருஷ்ணா ஜோடியாக நடித்தேன்.

அந்த காலத்திலேயே ஹீரோக்களுக்கு இணையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது நான்தான். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தேன். சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு சமமாக நடித்ததால் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தினர்.

நான் நடித்த 'ஒசே ராமுலம்மா' படம்தான் எனக்கு மிகவும் பிடித்த படம். தெலுங்கானாவில் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் புரட்சி பெண்ணாக நடித்தேன்.

இப்போதுகூட என்னை தெலுங்கானாவில் ராமுலம்மா என்று அழைக்கிறார்கள். என்னை இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய ரசிகர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com