சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமான நடிகைகள்


7 Bollywood actresses who made their debut opposite Salman Khan
x

பல நடிகைகளின் பாலிவுட் அறிமுகத்திற்கு சல்மான் கான் உதவியுள்ளார்.

சென்னை,

பல நடிகைகள் தங்கள் பாலிவுட் கெரியரை தொடங்க சல்மான் கான் உதவியுள்ளார். அதில், சிலர் புகழைப் பெற்றாலும், மற்றவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த வகையில், சல்மான் கான் அறிமுகப்படுத்திய 7 நடிகைகளை தற்போது காண்போம்.

சோனாக்சி சின்ஹா

சல்மான் கான் நடிப்பில் வெளியான 'தபாங்' (2010) திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் சோனாக்சி சின்ஹா. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவருக்கு வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தது.

டெய்சி ஷா

சல்மான் கானுடன் 'ஜெய் ஹோ' (2014) படத்தில் நடித்து பாலிவுட்டில் நுழைந்தவர் டெய்சி ஷா. தொடர்ந்து அவருடன் 'ரேஸ் 3'- ல் நடித்தார். இருந்தாலும் அவரால் சினிமாவில் வலுவான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

சாய் மஞ்ச்ரேக்கர்

சல்மான் கானின் 'தபாங் 3' (2019) படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் சாய் மஞ்ச்ரேக்கர். அந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது முதல் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அதன் பின் அவரால் வெற்றி படம் கொடுக்க முடியவில்லை.

சினேகா உல்லால்

சல்மான் கானின் 'லக்கி: நோ டைம் பார் லவ்' (2006) படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் சினேகா உல்லால். இப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும், அவருடைய நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

ஜரீன் கான்

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சல்மானின் 'வீர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜரீன் . அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் அவரால் பாலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்க முடியவில்லை.

பாக்யஸ்ரீ

சல்மானுடன் 'மைனே பியார் கியா' படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ . அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அதன் பிறகு அவர் பாலிவுட் படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.

பூமிகா சாவ்லா

சல்மான் கானுடன் இணைந்து 'தேரே நாம்' படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் பூமிகா. அந்தப் படம் வெற்றி பெற்றாலும், அவரது பாலிவுட் பயணம் தொடரவில்லை.

1 More update

Next Story