

ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து ‘ராயன்’ படத்துக்கான தேசிய விருதை சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து ‘ராயன்’ படத்துக்கான தேசிய விருதை சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி பெற்றுக்கொண்டார். சிறந்த தமிழ்த் திரைப்பட பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘ராயன்’. தனுஷ் நடிக்கும் 50-வது திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.