8 மணிநேர வேலை குறித்த விவாதம்: தீபிகா படுகோனேவுக்கு ராஷ்மிகா ஆதரவு


8 மணிநேர வேலை குறித்த விவாதம்: தீபிகா படுகோனேவுக்கு ராஷ்மிகா ஆதரவு
x
தினத்தந்தி 8 July 2025 3:45 PM IST (Updated: 25 July 2025 8:43 AM IST)
t-max-icont-min-icon

சினிமாவில் 8 மணி நேர வேலை செய்வது அவரவர் தனிப்பட்ட விவகாரம் என்று ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி வரும் 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் திடீரென அவர் விலகினார். அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை திருப்தி திம்ரி நடித்து வருகிறார்.

தினமும் 8 மணி நேர 'கால்ஷீட்' உடன்படிக்கைக்கு உடன்படாததே, படத்தில் இருந்து அவர் விலக காரணம் என பேசப்படுகிறது. தீபிகா படுகோனேவுக்கு, ஜெனிலியா உள்ளிட்ட நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து நடிகை ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார். ''சினிமாவில் 8 மணி நேர வேலை குறித்து விவாதமே எழுந்து வருகிறது. இது அவரவர் தனிப்பட்ட விவகாரம். ஆனால் என்னை பொறுத்தவரை, பணி நேரம் குறித்து டைரக்டரிடம் அவர் முன்கூட்டியே பேசிவிட்டது நியாயமானது. ஓய்வு இல்லாத தொடர் படப்பிடிப்பு மோசமான சூழலுக்கு வித்திடக்கூடும்'', என்று தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாகவே ராஷ்மிகா கருத்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story