பட்ஜெட் ரூ3 கோடி... ரூ107 கோடி வசூல்... சாதனை படைத்த கன்னட படம்

கன்னட சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 6வது இடத்தை ‘பிரேமதா ஊரலி’ பெற்றுள்ளது.
பட்ஜெட் ரூ3 கோடி... ரூ107 கோடி வசூல்... சாதனை படைத்த கன்னட படம்
Published on: 

சுமார் ரூ3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘பிரேமதா ஊரலி’ கன்னட படம் ரூ100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளது.

மனோஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீராம், தபஸ்வினி பூனச்சா, ராமிகா ஷிவு, ரங்கயான ரகு மற்றும் பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 25ல் வெளியான கன்னடத் திரைப்படம் ‘பிரேமதா ஊரலி’. காதல் ஊரில் அல்லது அன்பின் ஊரில் என்பது இதன் அர்த்தம்.

சுமார் ரூ3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ரூ100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளது. குறைவான தியேட்டர்களில் குறைவான காட்சிகளில் வெளியான இப்படம் பாராட்டில் ரசிகர்களை ஈர்த்து இந்த அளவிற்கு வசூலைக் குவித்துள்ளது. உலக அளவில் ரூ130 கோடி வசூலை இந்தப் படம் குவித்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். முதல் வார வசூலை விட, இரண்டாவது, மூன்றாவது வாரங்களிலும் வசூல் அதிகமாகி உள்ளது.

கன்னட சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 6வது இடத்தையும், அதிக லாபத்தைக் கொடுத்த படமாகவும், இந்த 2026ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படமாகவும் இருக்கிறது. இதன் லாப விகிதம் யாஷின் ‘டாக்சிக்’ மற்றும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படங்களின் லாபத்தையும் மிஞ்சியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com