சூர்யாவின் “சீன்” படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

சூர்யாவின் “சீன்” படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின்  “சீன்” படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on: 

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி உரிமையை ரூ.88 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 47

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரி

'ஆவேஷம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம், சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் நிறுவனம்

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.88 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com