

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜிவி பிரகாஷ் ‘ஹாப்பி ராஜ்’ படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கெளரி பிரியா நடித்துள்ளார். படத்தின் புரமோசன்களுக்காக பட குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த படத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ள கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறது. அவர் வெளிப்படுத்திய தந்தை வேதனை, மகன் மீது கொண்ட அன்பு ஆகியவை திரையில் மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மையக்கதை தந்தை - மகன் உறவை சுற்றியே நகர்கிறது. ஒரு மனிதனின் வெளிப்புற தோற்றத்தை வைத்து சமூகமே அவனை எப்படி கேலி செய்கிறது... அந்த கேலிகள் அவன் குடும்பத்தையும், குறிப்பாக அவன் மகனின் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கிறது என்பதையே படம் உணர்ச்சியோடு பேசுகிறது. சிறுவயதில் அப்பாவை ஹீரோவாக பார்த்த மகன், வளர வளர சமூகம் பேசும் வார்த்தைகளால் அப்பாவை வெறுக்க தொடங்குகிறான். ஆனால் இறுதியில், அப்பாவின் உண்மையான அன்பையும் தியாகத்தையும் புரிந்து கொள்ளும் தருணங்கள் தான் இந்த படத்தின் இதயம். இந்த காட்சிகள் பல பெண்கள் ரசிகர்களை திரையரங்கில் கண்ணீர் விட வைத்துள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ படம் ஓடும் திரையரங்கிற்கு நேரில் சென்று ஜி.வி.பிரகாஷ் மற்றும் பட குழுவினர் ரசிகர்களை சந்தித்தனர். படம் முடிந்து வெளியே வந்தபோது, பலரும் அவரை சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தனர். அப்போது ஒரு பெண்மணி கண்கலங்கியபடி அவரிடம் பேச முடியாமல் அழுதுள்ளார். உடனே அவரை ஆறுதல் கூறி அனுப்பிய ஜி.வி. பிரகாஷின் இந்த செயல் அங்கிருந்தவர்களை உணர்ச்சிவசப்படுத்தியது.
“ ‘ஹாப்பி ராஜ்’ படத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எல்லோரும் அவரவர் அப்பாவை இருக்கும் போதே மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லாத போது படையல் போட்டு எந்தப் பயனும் இல்லை. பெண் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே அப்பாக்களுடன் நன்கு ஒன்றிக்கொள்வார்கள். ஆனால் ஆண் மகன்கள் மிகவும் எளிதாக அப்பாக்களை புரிந்து கொள்வதில்லை என பேசினார். ரசிகையின் பேச்சு அடங்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் ஜிவி பிரகாஷ்.” என ரசிகை நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள வீடியோவை ‘இந்த வாழ்த்துக்களும் வார்த்தைகளும் போதும் சகோதரி. இவை 1000 விருதுகளுக்கு சமம்’ என்று ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.