ஒரு நல்ல தொடக்​கம் பாதி வெற்​றிக்​கு சமம்​ - “டெக்ஸ்லா” பட தொடக்க விழா​வில் சீமான் பேச்சு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘டெக்ஸ்லா’ படத்தில் ஜெய், சூரஜ் வெஞ்சரமூடு நடிக்கின்றனர்.
ஒரு நல்ல தொடக்​கம் பாதி வெற்​றிக்​கு சமம்​ - “டெக்ஸ்லா” பட தொடக்க விழா​வில் சீமான் பேச்சு
Published on

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்​கத்​தில் உரு​வாகும் ‘டெக்ஸ்லா’ படத்​தில் ஜெய், சுராஜ் வெஞ்​சரமூடு, ஆனந்​த​ராஜ், ஜி.எம்​.சுந்​தர், ஜார்ஜ் மரியன் உள்​ளிட்ட பலர் நடிக்​கிறார்​கள். யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கும் இப்​படத்​தைக் கண்​ணன் ரவி குழு​மம் சார்​பில் கண்​ணன் ரவி தயாரிக்​கிறார். இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நேற்று நடந்​தது.

விழா​வில், படக்​குழு​வினருடன் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், லதா ரஜினி​காந்த், தயாரிப்​பாளர் ஆர்​.பி. சவுத்​ரி, இயக்​குநர் பாலா, நடிகர் சமுத்​திரக்​கனி ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாகக் கலந்து கொண்​டனர்.

சீமான் பேசும்​போது, “ஒரு நல்ல தொடக்​கம் பாதி வெற்​றிக்​கு சமம் என்று சொல்​கிறார்​கள். அந்த வகை​யில் ‘டெக்​ஸ்​லா’ படத்​தின் தொடக்​கம் சிறப்​பாக அமைந்​திருக்​கிறது. இங்கு ஒரு படம் தயாரிப்​ப​தற்கு எவ்​வளவு பிரச்​சினை​கள் இருக்​கின்றன என்று தெரி​யும். தயாரிப்​பாளர் கண்​ணன் ரவி ஒரே நேரத்​தில் 16 திரைப்​படங்​களைத் தயாரித்​துக் கொண்​டிருக்​கிறார். இதன் மூலம் அவர் சினிமா மீது வைத்​திருக்​கும் பேரன்பையும், பெரும் காதலை​யும் நாம் புரிந்து கொள்ள முடி​யும். அவரது தயாரிப்​பில் அண்​மை​யில் வெளி​யான ‘தலை​வர் தம்பி தலை​மை​யில்’ திரைப்​படம் பெரிய வெற்​றியைப் பெற்​றிருக்​கிறது.

இதற்கு அடுத்து இந்த படத்​தைத் தொடங்கி இருக்​கிறார்​கள். ஒரு வெற்றி என்​பது பலருடைய வாழ்க்​கை​யில் பெரும் கொண்​டாட்​ட​மாக அமைந்து விடு​கிறது. எப்​படிப் பார்த்​தா​லும் வெற்​றிக்​குத் தேவை கடுமை​யான உழைப்​பு​தான். கடுமை​யாக உழைக்​கக்​கூடிய கலைஞர்​கள் ஒன்​றிணைந்​திருக்​கிறார்​கள். வாழ்த்​துகள்” என்​றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com