“திரையுலகிற்கு பெரிய இழப்பு” – ஆர்.பி.சவுத்ரி மறைவில் ரஜினிகாந்த் அஞ்சலி

நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று ஆர்.பி.சவுத்ரியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
“திரையுலகிற்கு பெரிய இழப்பு” – ஆர்.பி.சவுத்ரி மறைவில் ரஜினிகாந்த் அஞ்சலி
Published on

சென்னை,

பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி. சவுத்ரி மறைவையடுத்து, திரையுலகினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது சவுத்ரி தன்னை சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், "எனது 100-வது படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும்" என சவுத்ரி கேட்டுக் கொண்டதாக கூறினார்.

சவுத்ரியை நேர்மை மற்றும் கடின உழைப்பிற்கு பெயர் பெற்ற சின்னப்பா தேவருடன் ஒப்பிட்டு பேசிய ரஜினி, எளிய குணமும், தெளிவான சிந்தனையும் கொண்ட ஒரு மாமனிதரை திரையுலகம் இழந்துவிட்டது” என்று உருக்கமாக நினைவுகூர்ந்தார். மேலும், ஆர்.பி. சவுத்ரியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com