’ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்’: துரந்தர்-2 படத்தை பாராட்டிய ரஜினி

துரந்தர்-2 படம் 4 நாட்களிலேயே ரூ.761 கோடி வசூலித்துள்ளது.
’ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்’: துரந்தர்-2 படத்தை பாராட்டிய ரஜினி
Published on

சென்னை,

துரந்தர்-2 படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

Also Read
“துரந்தர் 2” தூக்கத்தை வரவைக்கும் காமெடி படம் - நடிகை ரம்யா விமர்சனம்
’ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்’: துரந்தர்-2 படத்தை பாராட்டிய ரஜினி

இப்படத்தை தொடர்ந்து, 'துரந்தர்'படத்தின் 2-ம் பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்ச்' திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று 4 நாட்களிலேயே ரூ.761 கோடி வசூலித்துள்ளது. இப்படத்திற்கு பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

அதன்படி, `துரந்தர் தி ரிவென்ச்' திரைப்படம் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என படக்குழுவினரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com