ஏ.ஆர்.ரகுமான், சாய் அபயங்கர்... மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது யார்?

‘ரோஜா’ திரைப்படத்திலிருந்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான், சாய் அபயங்கர்... மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது யார்?
Published on

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், இந்தப் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. ஆனால், அது உண்மையல்ல என்றும், ஏ.ஆர்.ரகுமானே இசையமைப்பாளராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்காக ஏற்கனவே ஒரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் அமைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Also Read
’விஜய்யை மலையாள சினிமாவுக்கு தூக்கிட்டு போக ஆசை’ - நடிகை சுவாசிகா
ஏ.ஆர்.ரகுமான், சாய் அபயங்கர்... மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைப்பது யார்?

1992-ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ திரைப்படத்திலிருந்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வருகின்றனர். முன்னதாக, ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மணிரத்னம் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com