3வது திருமணம்... 61 வயதில் மீண்டும் மாப்பிள்ளையாகும் அமீர் கான்

அமீர் கான் - கவுரி ஸ்ப்ராட் திருமணம் எளிய முறையில் நடைபெற உள்ளது.

3வது திருமணம்... 61 வயதில் மீண்டும் மாப்பிள்ளையாகும் அமீர் கான்
Published on

3-வது திருமணம் செய்யும் அமீர் கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தனது காதலி கவுரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து பின்னர் விவாகரத்து பெற்ற அமீர் கான், தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார்.

எளிய முறையில் நடைபெறும் திருமணம்

அமீர் கான் - கவுரி ஸ்ப்ராட் திருமணம், மும்மையில் அமீர்கானின் இல்லத்தில் எளிய முறையில் நடைபெற உள்ளது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் குறித்து அமீர் கான்

திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமீர் கான், "ஜூலை 5-ஆம் தேதி நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். எங்கள் இல்லத்திலேயே திருமணம் நடைபெறும். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொள்வார்கள். எங்களுடைய திருமணத்திற்கு உங்களுடைய அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும். உங்கள் ஆசியுடன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தார். அப்போது அவரது மகன் ஜுனைத் கானும் உடனிருந்தார்.

யார் இந்த கவுரி ஸ்ப்ராட்?

கவுரி ஸ்ப்ராட், பெங்களூருவைச் சேர்ந்தவர். லண்டனில் பேஷன் மற்றும் ஸ்டைலிங் படிப்பை முடித்துள்ள அவர், தற்போது மும்பையில் சலூன் ஒன்றை நடத்தி வருவதுடன், அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com